About Me

header ads

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவோம் – கபீர் ஹாசிம்

 


பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆட்சியைப் பிடித்தால், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்படத் தயார் என அதன் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இன்று ஐக்கிய மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை, கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்ததாக தெரிவித்தார்.

Post a Comment

0 Comments