அரசாங்கத்திற்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தாமல், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 சொகுசு வாகனங்களில், இதுவரை 20 வாகனங்கள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படும் வகையில் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்களை மீளப்பெறுவதோடு, குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு பிரதம நீதவான் திலின கமகே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.
2015 ஆம் ஆண்டுக்கு பின்னர், பிராடோ, லேண்ட் க்ரஷர், V8, ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட 200 சொகுசு வாகனங்கள், 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட சாதாரண வாகனங்களாக பதிவு செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும், சொகுசு வாகனங்களை உடனடியாக அரசிடம் ஒப்படைக்குமாறு உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
0 Comments