பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் அறவிடும் பஸ்கள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்று (01) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தேசிய போக்குவரத்து
ஆணைக்குழுவினால் 4.24 சதவீதமாக பஸ் கட்டணம் குறைக்கப்பட்டிருந்த நிலையில் ஆரம்ப கட்டணம் 27 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட பஸ் கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிடும் பஸ்கள் தொடர்பில் முறையிட 1955 அல்லது 071 25 95 555 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் அறவிடும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
0 Comments