இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (04) இலங்கை வருகிறார்.
இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தவிர வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சருடன், அந்நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவும் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments