About Me

header ads

இஸ்ரேலை எச்சரிக்கும் ஈரான் மீறினால் தாக்குதல் தொடரும்.

 


இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் அதன் அனைத்து உட்கட்டமைப்புகளையும் இலக்குவைப்போம்  என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின் ஆயுதப்படையின் கூட்டு தளபதி மேஜர்ஜெனரல் முகமட் பகேரி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் இந்த குற்றங்களை தொடர முயன்றால் எங்கள் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு எதிராக ஏதாவது செய்ய முயன்றால் இன்றிரவு நடவடிக்கையை மேலும் பல மடங்கு வலுவான விதத்தில் முன்னெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் அனைத்து உட்கட்டமைப்பும் இலக்குவைக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

ஈரானின் புரட்சிகர காவலர் படையணி இன்றைய ஏவுகணை தாக்குதலை மேலும் தீவிரமாக முன்னெடுப்பதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments