கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதிய பாராளுமன்றம் கூடும் போது அது தொடர்பான கணக்காய்வு அறிக்கையை இறுதி செய்ய திட்டமிட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இ-பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பான கொள்முதல் செயல்முறையின் தணிக்கை அறிக்கையை இறுதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, என்றார்.
விசா வழங்குவது இந்திய நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட பிறகு ஏற்படும் செலவுகள் குறித்த தகவல்கள் தொடர்புடைய தணிக்கை அறிக்கைகளில் பதிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
0 Comments