About Me

header ads

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்படும்!

 


அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று (01) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்திற் கொண்டு இவ்வாறான சம்பள உயர்வு சாத்தியமா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சம்பள அதிகரிப்பு எந்த மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்பதும் பல கட்டங்களில் செய்யப்படுமா என்பதும் வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பின் போது கலந்துரையாடி தீர்மானிக்கப்பட வேண்டுமென அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் கொள்கை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments