புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சமந்தகுமார எனப்படும் வெலே சுதா அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் இருந்து ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (12) இந்த சோதனையை மேற்கொண்டிருந்தனர்.
வெலே சுதா தடுத்து வைக்கப்பட்டுள்ள விசேட பிரிவின் A பிரிவில் உள்ள 38ஆம் இலக்க அறைக்குள் இருந்து குறித்த கையடக்க தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கையடக்க தொலைபேசிக்குள் சிம் அட்டை காணப்படவில்லை எனவும், கையடக்க தொலைபேசி மேலதிக விசாரணைகளுக்காக விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
0 Comments