About Me

header ads

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் !

 


நாடளாவிய ரீதியில் எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

 

அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உதவிச் செயலாளரும் ஊவா மாகாண இணைப்பாளருமான டொக்டர் பாலித ராஜபக்ஷவுக்கு எதிராக முறையான முறைப்பாடு எதுவுமின்றி நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, இன்று முதல் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு அனைத்து வைத்தியசாலைகளிலும் கறுப்புக்கொடி காட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments