About Me

header ads

கெஹலியவுக்கு பிணை !

 


முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட மூவரை பிணையில் விடுதலை செய்ய மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம்   புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  2024  பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை மனு கடந்த 7 மாத காலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த பிணை உத்தரவு புதன்கிழமை (11)நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments