About Me

header ads

மார்ச் 12 இயக்கத்தின் விவாதத்தில் ரணில்,அநுர பங்கேற்க இல்லை!

 


எதிர்வரும் தேர்தலை கருத்திற் கொண்டு மார்ச் 12 இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நேரடி விவாதங்களில் முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என உறுதிப்படுத்தியுள்ளனர்.

16 வேட்பாளர்கள் விவாதங்களில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளதாக இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதன்படி, செப்டம்பர் 7, 2024 சனிக்கிழமை நடைபெறும் முதல் நேரடி விவாதத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை கம்யூனிச கட்சியின் திலித் ஜெயவீர மற்றும் சுயேட்சை வேட்பாளர் பி. அரியநேத்திரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் மக்கள் போராட்டக் கூட்டணியின் நுவான் போபகே ஆகியோர் செப்டம்பர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள நேரடி விவாதத்தில் மேலும் பல வேட்பாளர்களுடன் பங்குபற்றவுள்ளனர்.

இதேவேளை, சுயேட்சை வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ரொஷான் ரணசிங்க எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள விவாதத்தில் மேலும் ஐந்து வேட்பாளர்களுடன் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments