About Me

header ads

மனைவிக்கு பிரசவம் ; செலவுக்கு மகனை விற்ற கணவர் !

 


உத்தரபிரதேசத்தில் பர்வா பாட்டியை சேர்ந்தவர் ஹரீஸ் படேல். இவர் ஒரு கூலித்தொழிலாளி ஆவார். இவருக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் இருக்கிறார்கள். இப்போது அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் 6வது குழந்தை பிறந்துள்ளது. 

ஆனால், மருத்துவமனை சிகிச்சை கட்டணத்தை ஹரீஸ் படேலால் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது பிரசவ சிகிச்சைக்கு உரிய பணத்தை கட்டாமல், மனைவியையும், பிறந்த குழந்தையையும் மருத்துவமனையிலிருந்து அனுப்ப முடியாது என்று மருத்துவ ஊழியர்கள் கறாராக சொல்லிவிட்டார்கள். 

இதனால், என்ன செய்வதென்றெ தெரியாமல் தவித்து நின்றார் ஹரீஸ் படேல். அப்போது, 3 வயது மகனை, குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்றுவிட்டால், மருத்துவமனையின் கட்டணத்தை செலுத்தி விடலாம் என்று அங்கிருந்த சிலர் ஹரீஷ் படேலுக்கு ஐடியா தந்து, அதற்கான அழுத்தத்தையும் தந்துள்ளனர்.

இதனால், வேறுவழியில்லாமல் தன்னுடைய 3வயது குழந்தையை விற்க ஹரீஸ் படேலும் சம்மதித்துள்ளார். 

இதற்காக போலா யாதவ் - கலாவதி என்ற தம்பதியினரிடம் பேசி, 3 வயது மகனை விற்பனை செய்ய, அமரீஸ் யாதவ் என்ற புரோக்கரும் முன்வந்தார். ஆனால், அதற்குள் இந்த விவகாரம் போலீசுக்கு தெரியவந்தது. 

இறுதியில், தரகர் அமரீஸ் யாதவ், குழந்தையை தத்தெடுக்க முயன்ற தம்பதிகள் போலா யாதவ் - கலாவதி, போலி மருத்துவர் தாரா குஷ்வாஹா, மருத்துவமனை உதவியாளர் சுகந்தி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்

Post a Comment

0 Comments