தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க சோர்வு காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வெடுக்குமாறு வைத்தியர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.
திஸாநாயக்கவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பேரணியில் கலந்து கொள்ள முடியவில்லை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, மாத்தறை, தெய்யந்தரையில் நடைபெற்ற பேரணியில் தெரிவித்தார்.
“அனுரவுக்கு உடல்நிலை சரியில்லை, கடந்த சில நாட்களாக ஓய்வின்றி இருந்ததால் தற்போது சோர்வடைந்துள்ளார். அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இன்று (07) காலை அவரின் நிலை தீவிரமடைந்தது. எனவே, ஒரு நாளாவது ஓய்வெடுக்குமாறு வைத்தியர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர். எனவே இன்று அவருக்கு ஓய்வு வழங்க முடிவு செய்துள்ளோம்” என்று அவர் பேரணியில் கூறினார்.
இதேவேளை திஸாநாயக்க நேற்று (07) காலை கொழும்பில் நடைபெற்ற NPP சட்டத்தரணிகள் மாநாடு மற்றும் விளையாட்டு மாநாட்டில் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனுரகுமார திஸாநாயக்க சோர்வு காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வெடுக்குமாறு வைத்தியர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.

0 Comments