தலிபான் நிர்வாக பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை தவிர்க்குமாறு, வெளிநாடுகளில் உள்ள அனைத்துத் தூதுவர்களுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
தலிபான் பிரதிநிதிகளுடன் இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதர் வைஸ் அட்மிரல் கொலம்பகே, சந்திப்பு நடத்தியதும், புகைப்படம் எடுத்துக்கொண்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இலங்கை
தாலிபான் நிர்வாகத்தை இன்னும் அங்கீகரிக்காமையே இதற்கான காரணம் என வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஐநா இதுவரை தலிபான் நிர்வாகத்தை ஆப்கானிஸ்தானின் சட்டப் பிரதிநிதியாக அங்கீகரிக்கவில்லை எனவும் சார்க் செயலகம் தற்போதைய தலிபான் நிர்வாகத்தை சார்க்கின் மீண்டும் தொடங்கும் கொள்கை மற்றும் தொழில்நுட்ப அளவிலான கூட்டங்களுக்கு அழைக்கவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது
எனினும் இந்த சந்திப்பு குறித்து ஜெயநாத் கொலம்பகே இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியையும் பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தவிர்க்க முடியாத சந்திப்புகளுக்கான தேவை ஏற்பட்டால், கட்டாயம் வெளிவிவகார அமைச்சகத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
0 Comments