About Me

header ads

தொலைபேசி கம்பிகளை திருடிய வர்கள் கைது.

 


சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசி கம்பிகளை அறுத்து திருடிய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள் நேற்று (05) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதுகல சந்தியிலிருந்து பிஹல்பொல நோக்கி செல்லும் பிரதான வீதியில் உள்ள தொலைபேசி கம்பிகளை சந்தேகநபர்கள் அறுத்து திருடியுள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 59 வயதுடைய நாரம்மல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர்கள் இன்று (06) குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கிரிஉல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment

0 Comments