அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் - சிங்கள இன முரண்பாட்டைத் தோற்றுவிக்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளில் மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளோம்.
ஜனாதிபதியின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments