சம்மாந்துறை,கல்முனை, அம்பாறை, பொத்துவில் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளும் முழு அம்பாறை மாவட்டமும் எந்த மதமும், இனமும் ஓரங்கட்டப்படாமல் அபிவிருத்தியில் உள்வாங்கப்படும்.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஐ அலைவரிசை எந்தவித ஒழுங்கு முறைகளும் பின்பற்றப்படாது இஷ்டம் போல தனியாருக்கு விற்கும் சூதாட்டம் அரங்கேறிவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு.
கல்வியையும்,சுகாதாரத்தையும் தனியார் மயமாக்க இடமளியேன்.
நாட்டின் எதிர்கால ஜனாதிபதியாக சம்மாந்துறை, கல்முனை, அம்பாறை, பொத்துவில் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளும் அம்பாறை மாவட்டமும் எந்த மதத்தையும் இனத்தையும் ஓரங்கட்டாமல் முழு மாவட்டத்தையும் ஒன்றிணைத்து சிறந்த அபிவிருத்தியை மேற்கொள்ளவதாகவும், மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சம்மாந்துறை, கல்முனை, அம்பாறை மற்றும் பொத்துவில் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளும் அண்மையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்களினால் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரச பாடசாலைகளுக்கு பேருந்து வழங்கும் பிரபஞ்சம் (சக்வல) வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (14) சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு 75 ஆவது பேரூந்து வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் 364.2 மில்லியன் ரூபா பெறுமதியான பஸ்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாகவும், பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் 33 பாடசாலைகளுக்கு 290 இலட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும்,மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச மருத்துவமனைகளுக்கு 171.9 மில்லியன் மதிப்பிலான மருத்துவமனை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அவ்வாறே, சம்மாந்துறை வைத்தியசாலைக்கு 30 இலட்சம் பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் ஏலவே வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் நினைவுகூர்ந்தார்.
உலகின் பல நாடுகள் Hard Power ஐ தங்கள் கொள்கைகளாக பயன்படுத்துகின்றன என்றும்,மேலும் பல நாடுகள் Soft Power ஐ தங்கள் கொள்கைகளாக பயன்படுத்துகின்றன
என்றும்,முப்படை இராணுவத்தையும்,நாட்டின் பொருளாதார பலத்தையும் பயன்படுத்தி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதே வல்லாதிக்க சக்திகள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.பெரிய இராணுவமும் பெரிய பொருளாதாரமும் இல்லாத நாடுகள் மென் வலுச் சக்தியைப் பயன்படுத்துகின்றன என்றும்,மென்வலு அதிகாரத்தின் கீழ்,தங்கள் பேச்சுவார்த்தை திறன்கள்(Negotiations Skills),
தங்கள் இராஜதந்திர திறன்கள் (Diplomatic Skills), மற்றும் இராஜதந்திர விவகாரங்களில் தங்கள் அனுபவங்களை(International Diplomatic Experience) ஆட்சி செய்ய பயன்படுத்துவதை குறிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
இலங்கை தற்போது வங்குரோத்து நாடாக மாறியுள்ளதுடன்,நாட்டில் ஸ்மார்ட் வலுவை கட்டியெழுப்ப வேண்டும் என்றே எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி முன்மொழிவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் பாடசாலைக் கல்வி முறையை பலப்படுத்தி நாட்டில் ஸ்மார்ட் வலுவை பலப்படுத்த முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டில் 10151 பாடசாலைகள் உள்ளதாகவும், பிள்ளைகள் வெவ்வேறு பாடத்திட்டங்களை கற்பதாகவும் ஆனால் அவை யாவும் பழைய பாடத்திட்டங்கள் எனவும்,அவை புதுப்பிக்கப்பட்டு கல்வியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஆங்கில மொழிக் கல்விக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம் என்றும்,மொழி ஆய்வு கூடங்கள் நிறுவப்பட வேண்டும் என்றும்,தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பிள்ளைகள் அனுப்பப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
ஒரு நாடாக முன்னோக்கிச் செல்வதற்கு நாம் பசுமை அபிவிருத்தியை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும்,பசுமை அபிவிருத்தியை நோக்கிச் செல்ல சுற்றுச்சூழலைப் பேணுவது அவசியமானது என்றும், நாட்டின் அபிவிருத்தி நிலைபேறானதாக இருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் உள்ள பாடசாலைகளில் நவீன தொழில்நுட்பப் போக்குகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், கோவிட் காலத்தில் பிள்ளைகள் கற்பதற்கு கையடக்கத் தொலைபேசிகள் கூட இருக்கவில்லை என்றும்,சிக்னல்களைக் பெற பிள்ளைகள் மரங்கள் மற்றும் பாறைகளில் ஏற வேண்டியிருந்ததாகவும்,சிலர் மேடைகளில் ஏறி,தகவல் தொழில்நுட்பப் புரட்சியை உருவாக்க வேண்டும் என்று சத்தமாக கூறுகின்றனர் என்றும்,பாடசாலை மாணவர்களுக்கு கணினி வாங்கும் அளவிற்கு பொருளாதாரம் வலுவாக இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்
ரணசிங்க பிரேமதாச அவர்கள் 43 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு சீருடையும்,மதிய போஷனமும் வழங்கினார் என்றும்,அதன் பின்னர் பதவியேற்ற அரசாங்கங்கள் மதிய உணவை நிறுத்தியுள்ளதாகவும்,41 இலட்சம் அரச பாடசாலை மாணவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படும் எனவும் அது பொறுப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
ஸ்மார்ட் சாதனம் இல்லாத ஒவ்வொரு பாடசாலை பிள்ளைகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஸ்மார்ட் சாதனம் வழங்கப்படும் என்றும்,ஸ்மார்ட் மாணவர்களை உருவாக்கி,ஸ்மார்ட் சாதனத்தை வழங்கி அதனை பிள்ளைகளின் உரிமையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
நாட்டில் உள்ள அனைத்தும் ஏலம் விடப்படுவதாகவும், நாட்டின் வளங்கள் 24 மணி நேரமும் விற்கப்படுகின்றன என்றும்,இது அரசாங்கத்தின் கொள்கையாக இருந்து வருவதாகவும்,ரூபவாஹினி நிறுவனத்திற்கு சொந்தமான ஐ சேனலை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ தயாராகி வருவதாக கூறப்படுவதாகவும்,
புதிய முதலீட்டாளர்களை அரச ஊடகங்களுடன் இணைக்கும் ஒழுங்கு முறை உள்ளதாகவும், ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தமது சொந்த சொத்தைப் போல,தான் நினைத்தது போல,நினைத்த நபர்களுக்கு விற்கும் சூதாட்டம் அரங்கேறி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ரூபவாஹினி ஐ சேனல் ஒரு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டு கவரேஜுக்கு அனுமதி பெற முயற்சிக்கின்றனர் என்றும்,இந்தச் செயல்கள் அனைத்தும் கண்முன்னே மேற்கொள்ளப்படுவதாகவும்,ஐ அலைவரிசைக்கு முதலீட்டாளர்களை போட்டி முறையின் மூலம் பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதையே முதலில் மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வளங்களை விற்கும் சூதாட்டத்திற்கு எதிராக நாம் எழுத்து நிற்க வேண்டும் என்றும்,நாட்டின் வளங்களும், நாட்டின் சொத்துக்களும் யாருடைய தனிச் சொத்து அல்ல என்றும்,மக்களின் வளங்களைக் கையாளும் போது வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும்,கொள்முதல் முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும்,ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மீண்டும் இந்த சட்டவிரோத ஏலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கல்வியையும்,சுகாதாரத்தையும் தனியார் மயமாக்க இடமளியேன் என்றும், நாட்டின் ஏழ்மை 40 இலட்சம் அதிகரித்து விட்டதாகவும், இதில் அரசாங்கத்திற்கு எத்தகைய அக்கறையும் இல்லை என்றும், புதிய வளமான நாட்டை உருவாக்க,புதிய இளைஞர்களை பலப்படுத்த,நாட்டின் குடிமக்களை பலப்படுத்த அனைவரும் ஒன்றாய் கைகோர்ப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments