About Me

header ads

இலங்கையில் அறிமுகவுள்ள அதிசயமான புதிய வரி.

 


இலங்கையில் புதிய வரி ஒன்றை அறவிடுவதற்கு, உள்நாட்டு இறைவரித் திணைக்களமும், பொலிஸாரும் இணைந்து திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாக உயர்தர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கப்பம் பெறுதல், பாதாள உலகம், திருட்டு, போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை சட்டவிரோதமாக ஈட்டிய கடத்தல்காரர்களின் பணம் மற்றும் பிற சொத்துக்களுக்கு வரி அறவிடுவதற்காக இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளின் சட்டவிரோத சொத்துக்களுக்கு வரி வசூலிப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.


குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் போது, ​​இந்த முறையற்ற சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படவுள்ளது.

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் தகவல்களுக்கு அமைய வரி அறவீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


தற்போது, ​​சட்டவிரோத சொத்துக்களை குவித்துள்ள 8000 பேர் தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் தகவல்களை சேகரித்துள்ளனர்.


மேலும் குற்றம் சாட்டப்பட்ட 8000 பேரின் சொத்துகளை சரிபார்த்து அவர்களிடமிருந்து முதலில் வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments