About Me

header ads

மஹிந்த செலுத்த வேண்டிய மின்சார கட்டண நிலுவை தொடர்பில் வெளியான தகவல்.

 


12-09-2019 முதல் 15-09-2019 வரை ஹம்பாந்தோட்டை வீரகெடிய இல்லத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை மின்சார சபையிடம் மின்விளக்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.


இதன்படி வீரகெடிய இல்லத்தில் நடைபெறும் வைபவம் ஒன்றிற்காக பாதுகாப்பு விளக்குகளை பொருத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கோரிக்கைக்கு இணங்க தற்காலிகமாக மின்சாரம் வழங்கப்பட்டு, பாதுகாப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்ட பின்னர் உபகரணங்களும் அகற்றப்பட்டுள்ளன.


இதனால் பாதுகாப்பு விளக்குகள் பொருத்துவதற்கும், ஜெனரேட்டர் விநியோகத்திற்கும்  மின்சார சபைக்கு 2,682,246.57 ரூபாய் செலவு செய்ய வேண்டி ஏற்பட்டது.


ஆனால் இதுவரை அந்தத் தொகை வழங்கப்படவில்லை என்று மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.  


தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் நளின் ஹெவகே விடுத்த கோரிக்கைக்கு அமைய, மின்சார சபை அவருக்கு இந்த தகவலை வழங்கியுள்ளது.


இந்த மின்கட்டணம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்துடன் தொடர்புடையது என ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய  நளின் ஹேவகே தெரிவித்தார்.

Post a Comment

0 Comments