About Me

header ads

குவைத்தில் Barbie திரைப்படத்தை திரையிட தடை.

 


குவைத்தில் Barbie திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

படம் வெளியான சில வாரங்களிலேயே உலகம் முழுவதும் 1 பில்லியன் டாலர்களுக்கு மேல் வசூல் செய்த பின்னணியில் பொது நெறிமுறைகளை பாதுகாக்க குவைத் செயல்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

வியட்நாம் உட்பட மற்ற இடங்களில் படம் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தின் திரைப்பட வகைப்பாடு வாரியத்தின் தலைவர் லாஃபி அல்-ஜுபாய், தனது நாட்டின் கலாச்சாரத்திற்கு எதிரானதாகக் கருதப்படும் படங்களில் இருந்து காட்சிகளை நீக்குமாறு அவரும் அழைப்பு விடுப்பதாகக் கூறினார்.

Barbie இனை தடை செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு உள்துறை அமைச்சகத்திடம் லெபனான் கலாச்சார அமைச்சர் மொஹமட் மோர்டாடா கேட்டுக் கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments