பொலிஸ் தடுப்பில் இருந்தபோது இறந்ததாகக் கூறப்படும் ஆர்.ராஜகுமாரி என்ற பெண்ணின் மரணம் தொடர்பான மரண விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (26) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேகத்திற்கிடமான முறையில் அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று (26) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்படி, இந்த மரண விசாரணை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவாவினால் நடத்தப்பட்ட சாட்சி விசாரணை இன்று நீதிமன்றில் நிறைவடைந்தது.
அதன் பின்னரே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
0 Comments