ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வத்தளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவது குறித்த உத்தியோகபூர்வமாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார்.
அறிவிப்பு வெளியானதும், சில பெரிய மாற்றங்களை பொதுமக்கள் பார்க்கலாம் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் அதற்குப் பதிலாக கடந்த ஆண்டை போலவே டலஸ் அழகப்பெருமவிற்கு அவர் ஆதரவை வழங்குவர் என்றும் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டை விட தற்போது கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை சரியான பாதையில் இட்டுச் சென்றார் என தெரிவித்துள்ளார்.
0 Comments