குளிர்சாத பெட்டியின் கதவில் சிக்கியிருந்த அதிர்ஷ்ட இலாப சீட்டின் மூலம் பெண் ஒருவருக்கு 2 மில்லியன் டொலர் பரிசு கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கும் பெண்ணொருவருக்கே இவ்வாறு பரிசு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி அதிர்ஷ்ட இலாப சீட்டினை கொள்வனவு செய்துள்ளார்.
இருப்பினும் குறித்த அதிர்ஷ்ட இலாப சீட்டு சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் பெண்ணின் சமையலறையின் குளிர்சாதனப் பேட்டியின் கதவில் சிக்கியிருந்தமை கண்டுபிடிக்கட்டுள்ளது.
இதன் பின்னரே, குறித்த அதிர்ஷ்ட இலாப சீட்டின் இரண்டு மில்லியன் டொலர் பரிசுத்தொகை இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பரிசை பெற்றுக்கொண்ட பெண், அடமானத்தில் இருக்கும் தமது வீட்டை மீட்கவும், எஞ்சிய தொகையினை தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
0 Comments