அஸ்வெசும திட்டத்தை அமுல்படுத்தும் போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (26) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகளை வழங்குதல் மற்றும் எழுந்துள்ள ஏனைய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பது தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, அரச நிர்வாக செயலாளர் ரஞ்சித் அசோக, அஸ்வெசும திட்டத்தின் தலைவர் பி. விஜேரத்ன உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
0 Comments