நவகமுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த தேரர் ஒருவரின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 20ஆம் திகதி தேரர் ஒருவர் தனது உடலுக்கு தீ வைத்துக் கொண்டு உயிரிழந்ததாக கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த இடத்திற்கு நவகமுவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சென்றுள்ளனர்.
கடுவெல நீதவான், அரசாங்க பரிசோதகர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் குறித்த இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, குறித்த தேரர் உடலுக்கு தீ வைத்த காரணத்தால் உயிரிழந்திருக்க கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த 81 வயதான குறித்த தேரர் தானே கொட்டில் ஒன்றை உருவாக்கி அங்கிருந்து தனது உடலுக்கு தீ வைத்ததாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
0 Comments