About Me

header ads

மற்றொரு நோயாளி மருத்துவமனையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு

 


கெனியூலாவில் (cannula) ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக காய்ச்சல் நோயாளி ஒருவர் நேற்று (13)  உயிரிழந்துள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உதவி மேலாளர் ஆவார்.

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த கெனியூலாவில் இருந்து கிருமித் தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காய்ச்சலினால் காலி பிரதேசத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு பொருத்தப்பட்டிருந்த கெனியூலாவில் தொற்று ஏற்பட்டு அவை உடலில் கலந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

பின்னர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இருதய நோயாளர் என்பதால் வேறு வைத்தியசாலைக்கு மாற்ற வைத்தியர்கள் முயற்சித்தனர்.

ஆனால் அங்கு அவர் இறந்தார், மேலும் கெனியூலாவில் இருந்த பாக்டீரியா தொற்று மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் கருதுகின்றனர்.

Post a Comment

0 Comments