நாட்டிற்கு கொண்டு வரப்படும் மருந்துகளின் தரத்தினை பரிசீலிக்க தேவையான இரசாயன ஆய்வுக்கூடங்கள் இல்லை என்பதால், மருந்துகளின் தரம் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மயக்கமருந்து ஒன்றின் பயன்பாட்டின் பின்னர் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை இவ்விடயத்தை தெரிவித்துள்ளது.
மருந்துகளை பரிசோதனை செய்யும் நிபுணர்கள் தற்போது நாட்டில் இல்லை எனவும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.டி.ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
0 Comments