About Me

header ads

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை விட பெரிய உதாரண புருஷரே எமது நாட்டை ஆட்சி செய்கிறார்- வஜிர அபேவர்தன.

 


அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மிகவும் பெரிய நாடுகளாகும். எனினும், அந்த நாடுகளை விட பெரிய உதாரண புருஷரே எமது நாட்டை ஆட்சி செய்கிறார் என்பதை நினைத்து நாட்டு மக்கள் பெருமையடைய வேண்டும்.  

எமது தலைவரின் குரலுக்கு மேல் பேசக்கூடிய தலைவர்கள் இல்லை. அவர் இந்த உலகிலுள்ள பலமிக்க தலைவர் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

காலி, கரந்தெனிய பகுதியில் சனிக்கிழமை (24) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு 55 ஆசனங்களும், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு ஆசனமும் உள்ளது. 

தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் ஒரு ஆசனம் மாத்திரமே உள்ளது என நினைக்கிறீர்களா? இல்லை. தலைவர் உருவாகியிருந்தார். அதனை எனக்கு பார்ப்பதற்கு மாத்திரமே இருந்தது.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மிகவும் பெரிய நாடுகள். இருப்பினும், அந்த நாடுகளை விட பெரிய உதாரண புருஷரே எமது நாட்டை ஆட்சி செய்கிறார் என்பதை நினைத்து நாட்டு மக்கள் பெருமையடைய வேண்டும். 

அந்த நாடுகளை விட பெரியவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதை நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

நண்பர்களே, கனடாவின் தலைவர் எமது ஜனாதிபதியின் அருகில் அமரும் போது அவர் பேசுகிறாரா? இல்லை. 


பிரான்ஸ் ஜனாதிபதி பேசுவதை நான் பார்த்தேன். எமது தலைவரின் குரலுக்கு மேல் பேசக்கூடிய தலைவர்கள் இல்லை. அவர் இந்த உலகிலுள்ள பலமிக்க தலைவர்.

இது சிறிய நாடு. ஊடகங்களை அடக்குவதாக, சட்டங்களை கொண்டு வருவதாக கூறுகிறார்கள். சிங்கபூரின் ஊடக அதிகாரசபை சட்டமூலத்தை நான் படித்தேன். 

அது மிகவும் பெறுமதியானது. அதனையே கொண்டு வரவேண்டும். இதனிடையே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டு வரவுள்ளதாக கூறுகிறார்கள். அதனை கொண்டு வர வேண்டும். உலகில் ஏனைய நாடுகளுக்கு சிறந்தது என்றால் ஏன் இலங்கைக்கு சிறந்ததல்ல என்றார்.

Post a Comment

0 Comments