About Me

header ads

ஈரான் இலங்கை இடையே பண்டமாற்று ஒப்பந்தம்.

 


ஈரானுடன் பண்டமாற்று ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் திட்டத்தை இலங்கை அறிவித்துள்ளது.

எண்ணெய்க்காக செலுத்த வேண்டிய 250 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு பதிலாக, இலங்கை அடுத்த மாதம் ஈரானுக்கு தேயிலை பண்டமாற்று செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் சர்வதேச செய்தி நிறுவனத்தினடம் கருத்து தெரிவித்த இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல்,

இந்த திட்டம் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நாடு ஒரு முக்கியமான சந்தையை அணுகும் மற்றும் ஈரானும் இலங்கையும் டொலர்களை நம்பாமல் வர்த்தகம் செய்யலாம்.

ஒவ்வொரு மாதமும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான தேயிலையை 48 மாதங்களுக்கு அனுப்புவது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments