About Me

header ads

நீர் வழங்கல் துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்: அமைச்சர் ஜீவன் தொண்டமான்.




பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச முதலீடுகள் மற்றும் நீர்வழங்கல் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் பங்கேற்புடன் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், முதலீட்டு சபை அதிகாரிகள், கொழும்பு துறைமுக நகர் ஆணையாளர், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் உட்பட துறைசார் அதிகாரிகள் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

கொழும்பில் துரித கதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் போர்ட்சிட்டிக்கு நீர்வழங்கலின் போது முழுமையாக டிஜிட்டல் முறைமையை பயன்படுத்துவது தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

நீர்வழங்கல் அதிகாரசபை கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கி வந்தாலும், அதனை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பதே தனது இலக்கு என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதன்போது தெரிவித்தார்.

மேலும், அதற்கேற்ற வகையில் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் துறைமுக அபிவிருத்தி நகருக்கு நீர் வழங்களின்போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்காக திட்டம் வகுக்கப்படுகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலின்போது பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச முதலீடுகள் மற்றும் நீர்வழங்கல் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பாக நீர்வழங்கல் அமைச்சும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சும் இணைந்து ஒரு குழுவை நியமிப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments