உத்தியோகபூர்வ வெளிநாட்டுப்பயணங்களிற்காக ஐந்து கோடி ரூபாய்க்கு செலவிட்டார் என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார்.
இது முற்றிலும் தவறான தகவல் தவறாக வழிநடத்தும் தகவல் என வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா சவுதி அரேபியாவிற்கான இரு இருதரப்பு விஜயங்களிற்கு நான் தலைமை தாங்கினேன் என்னை தவிர 22 அதிகாரிகள் இந்த சந்திப்புகளில் கலந்துகொண்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் தனது வெளிநாட்டு பயணங்களிற்காக 5 கோடியை செலவிட்டுள்ளார் என தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
தகவல் உரிமை சட்டத்தின் உதவியுடன் இந்த தகவல் பெறப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏழு வெளிநாட்டு பயணங்களிற்காக இந்த தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments