About Me

header ads

பெண் போன்று நடித்து 14 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம்.

 


பேஸ்புக்கில் பெண் போன்று நடித்து 14 வயது சிறுவனை கம்பஹா பிரதேசத்திற்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கு தொடர்பில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவன் ருவன்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் எனவும், பெண் வேடமிட்டு பேஸ்புக்கில் நடித்த குறித்த சந்தேக நபர், கம்பஹாவிற்கு அழைத்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவனின் தந்தை கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சிறுவனிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் துசித குமாரவின் மேற்பார்வையின் கீழ், கம்பஹா பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பிரகாரம், கம்பஹா தலைமையகத்தின் பதில் தலைமைப் பரிசோதகரின் பணிப்புரையின் பேரில் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹரன்கஹதெனியவின் தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Post a Comment

0 Comments