About Me

header ads

தோப்பூரில் BOC ATM இயந்திரம் நிறுவக்கோரி BOC தலைவருடன் எம் எஸ் தௌபீக் எம்.பி சந்திப்பு.

 


(எஸ் சினீஸ் கான்) 

தோப்பூர் இலங்கை வங்கி கிளையில் ATM இயந்திரம் நிறுவுவது தொடர்பாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் மற்றும் இலங்கை வங்கி தலைவர்  ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேராவிற்கும் 

இடையிலான சந்திப்பானது இன்று (29) இலங்கை வங்கி தலைவரின் அலுவலகத்தில்  இடம்பெற்றது.

தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அவசர தேவையின் போது ATM இயந்திரத்தில் பணம் பெறுவதற்கு  சுமார் 15 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள மூதூர் நகருக்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்  செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக பிரதேச மக்களால் ATM இயந்திரம் ஒன்றினை நிறுவுமாறு கோரி கையொப்பம் இடப்பட்ட கோரிக்கை கடிதம் இலங்கை வங்கிக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவே இச்சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது தோப்பூர் இலங்கை வங்கி கிளையில்  ATM இயந்திரம் பொருத்துவதற்கு விரைவில் நடவடிக்கையை மேற்கொள்வதாக இலங்கை வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments