About Me

header ads

நடாசா எதிரிசூரியவின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை தேடும் சிஐடியினர்

 


கொழும்பில் இடம்பெற்ற நடாசா எதிரிசூரியவின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை அடையாளம்கண்டு அவர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகளை சிஐடியினர் ஆரம்பித்துள்ளனர்.

 

நடாசாவின் இந்த நிகழ்வில் பௌத்தத்தை அவமதிக்கும் கருத்துக்கள் வெளியானதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படும் நிலையிலேயே சிஐடியினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

பொலிஸ் சைபர் குற்றபிரிவு இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

பௌத்தமதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நகைச்சுவை கலைஞர் நதாசா எதிரிசூரியவை ஜூன் ஏழாம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சந்தேகநபர் தனது நிகழ்ச்சியின் போது பௌத்தமதம் பௌத்ததத்துவம் கிறிஸ்தவ மதம் ஆகியவற்றை அவமதித்தார் என முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்

Post a Comment

0 Comments