About Me

header ads

டொலரின் தொடர் வீழ்ச்சி ஆபத்தானது - அநுர

 


இலங்கை சர்வதேச சந்தையில் முனைப்புடன் ஈடுபடாததால் தான் டொலரின் பெறுமதி குறைவதற்கான காரணம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடன்களை திருப்பிச் செலுத்துதல், பொருட்களை இறக்குமதி செய்தல் மற்றும் வெளிநாட்டு இருப்புகளை அதிகரிப்பதற்கான மத்திய வங்கியின் முயற்சிகள் போன்ற முக்கிய மூன்று காரணிகளுக்காக தான் இலங்கைக்கு டொலர் தேவைப்படுகிறது என பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் தெரிவித்தார்.

டொலரின் தொடர்ச்சியான வீழ்ச்சியானது இலங்கையின் பொருளாதாரம் மேலும் சுருங்குவதற்கு வழிவகுக்கும் எனவும், இதன் காரணமாக பொதுமக்களின் துன்பங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

0 Comments