மதப்பிரிவினைகளை ஏற்படுத்தி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதை அரசாங்கம் கடுமையாக ஒடுக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனவாதம் மற்றும் மதவெறியைப் பரப்புவதற்கு இடமளிக்க மாட்டார் என்றும் வஜிர அபேவர்தன வலியுறுத்தினார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் விசேட கருத்து வெளியிடும் போதே வஜிர அபேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் கைப்பற்றியதன் முதன்மையான நோக்கம் வீழ்ந்த நாட்டைக் கட்டியெழுப்புவதே எனத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பான் விஜயம், கடந்த காலங்களில் சிலர் தனிப்பட்ட தீர்மானங்களுக்கு முன்னுரிமை வழங்கியதன் காரணமாக இலங்கை மீது ஜப்பான் கொண்டிருந்த சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையை நீக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயம் உதவியதாக விஜித அபேவர்தன வலியுறுத்தினார்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், நீண்ட காலமாக தேசியத் திட்டத்தைச் செயல்படுத்த எந்த நாட்டுத் தலைவருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
0 Comments