About Me

header ads

பாடசாலையில் ரவுடித்தனம் செய்த 7 மாணவர்கள் பொலிசாரால் கைது.

 


கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (27) இடம்பெற்ற சமய வழிபாட்டு நிகழ்வொன்றின்போது வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் அந்தப் பாடசாலையின் 7 மாணவர்கள் கெக்கிராவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெக்கிராவ புறநகர் பகுதியில் உள்ள தேசிய பாடசாலையொன்றில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வின்போது, அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் குழுவொன்று இவ்வாறு நடந்துகொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மாணவர்கள் பிரித் மண்டபத்தையும் தாக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள் 11, 12 மற்றும் 13ஆம் வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments